Solar Eclipse: சூரிய கிரகணம் எப்போது? - திருப்பதி, சபரிமலை ஐயப்பன் கோயில் அடைக்கப்படும் விபரம் இதோ.

சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி நடக்க உள்ளது. எந்தெந்த பகுதிகளில் கிரகணம் தெரியும், கோயில் நடை சாற்றப்படும் விபரங்களைப் பார்ப்போம்...


ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வருவது வழக்கம். அந்த நிகழ்வுவின் ஒரு பகுதியாக இந்தாண்டு இரண்டாவது சூரிய கிரகணம் மற்றும் இந்த ஆண்டு கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நடக்க உள்ளது.


இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற பெரிய பிரபலமான கோயில்கள் கிரகணத்தின் போது எவ்வளவு மணி நேரம் நடைசாத்தப்படும் என தெரிவித்துள்ளன.


இந்த பதிவில் சூரிய கிரகணம் என்றால் என்ன, அப்போது செய்ய வேண்டிய செயலும், செய்யக் கூடாதவையும் தெரிந்து கொண்டு அதன் படி எப்படி நம் வாழ்வை வளமுறுத்திக் கொள்வது என்பதைப் பார்ப்போம்.


சூரிய கிரகணம்
விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி (26.12.2019) வியாழக் கிழமை உலகளவில் அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது.