பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்

அத்துடன், "இந்தியாவைச் சேர்ந்த போலீஸார், முஸ்லிம் சமூகத்தினரை இனப்படுகொலை செய்யும் அளவுக்கு எப்படி தாக்குகின்றனர் என நீங்களே பாருங்கள்" என, அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளை அவர் விவரித்திருந்தார்.

இம்ரான் கானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உத்தரப் பிரதேச மாநில போலீஸார், குறிப்பிட்ட இந்த வீடியோ வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என ஆதாரப்பூர்வத்துடன் ட்விட்டரில் உடனே பதிலடி கொடுத்தனர்.